Anbumani Ramadoss: அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு 3274 ஓட்டுனர், நடத்துனர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Anbumani Ramadoss: அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு 3274 ஓட்டுனர், நடத்துனர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Published on: February 14, 2026 at 11:37 pm
சென்னை, பிப் 14 2026; ஓட்டுனர், நடத்துனர் நியமன போட்டித்தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்து என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 3274 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு 7 மாதங்களாகும் நிலையில், இன்று வரை அதற்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஏழை இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் வகையில் ஆள்தேர்வு முடிவுகளை வெளியிடாமல் அரசு தாமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம், விரைவுப் போக்குவரத்துக்கழகம் மற்றும் அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் 6 கோட்டங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களாக நியமிப்பதற்காக 3274 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வி்ண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. ஆனால், எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்ட பிறகு இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பொருளாதாரத்தின் அடித்தட்டில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு இந்த வேலை கிடைத்தால் அவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும். ஆனால், இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது முறையல்ல. போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆள்தேர்வுக்கான அனைத்து நடைமுறைகளையும் விரைவுபடுத்தி தகுதியானவர்களுக்கு பணி ஆணைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் இன்ஜின்.. மு.க ஸ்டாலின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com