GDP growth projection: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) வளர்ச்சி முன்னறிவிப்பை 7.4% ஆக உயர்த்தி உள்ளது.
GDP growth projection: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) வளர்ச்சி முன்னறிவிப்பை 7.4% ஆக உயர்த்தி உள்ளது.

Published on: February 7, 2026 at 12:08 pm
புதுடெல்லி, பிப்.7, 2026: இந்திய ரிசர்வ் வங்கியானது, வளர்ச்சி முன்னறிவிப்பை 7.4 சதவீதம் ஆக உயர்த்தியுள்ளது. அதாவது, இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை, 2025–26 நிதியாண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சி முன்னறிவிப்பை 7.4% ஆக உயர்த்தியுள்ளது.
இதில், முந்தைய கணிப்பு 7.3% (டிசம்பர் 2025) ஆக காணப்பட்டது. தற்போது, 7.4% என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் காலாண்டு – 6.9% (முந்தைய 6.7%) எனவும், இரண்டாம் காலாண்டு – 7% (முந்தைய 6.8%) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆர்.பி.ஐ, “உள்நாட்டு தேவையின் நிலைத்தன்மை மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. உலக வர்த்தக அசாதாரணங்கள் மற்றும் நிதி சந்தை அதிர்வுகள் இருந்தாலும், இந்திய பொருளாதாரம் சர்வதேச சவால்களிலிருந்து ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக உள்ளது. இதனால், நுகர்வு மற்றும் முதலீட்டு வேகம் தொடர்ச்சியாக வளர்ச்சியை ஆதரிக்கும். இது, இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சி பாதையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சீனாவை விட குறைந்த விலையில் எஃகு.. பசுமை மையமாக மாறப்போகும் நக்சல் பகுதி.. தேவேந்திர பட்னாவிஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com