U 19 ODI World Cup: U-19 ஒருநாள் உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா, இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.
U 19 ODI World Cup: U-19 ஒருநாள் உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா, இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.

Published on: February 5, 2026 at 1:16 pm
புதுடெல்லி, பிப்.5, 2026: இளையோர்-19 ஒருநாள் உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா, இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்தியா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் U-19 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.
முன்னதாக, ஜிம்பாப்வே, ஹராரேவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. அதாவது, ஆப்கானிஸ்தானின் 311 ரன்கள் இலக்கை 41.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பில் இந்தியா அடைந்தது. ஆரோன் ஜார்ஜ், 104 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தார்.
மற்றொரு வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். கேப்டன் ஆயுஷ் மாட்ரே, 59 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் நூரிஸ்தானி ஓமர்சாய் 2 விக்கெட், வஹீதுல்லா ஜாத்ரான் 1 விக்கெட். எடுத்திருந்தனர்.
இதையும் படிங்க: T20 World Cup match: நாங்க விளையாட வர்ல.. அடம் பிடிக்கும் பாகிஸ்தான்!
ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபைசல் ஷினோசாதா, 93 பந்துகளில் 110 ரன்களும், உசைருல்லா நியாசாய், 86 பந்துகளில் 101 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய பந்து வீச்சில் தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சௌஹான் தலா 2 விக்கெட் எடுத்தனர். ஆரோன் ஜார்ஜ் போட்டியின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார்.
இங்கிலாந்து
மற்றொரு அரையிறுதியில், இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா, U-19 உலகக் கோப்பை வரலாற்றில் மிகச் சிறந்த அணியாகும்; 2000, 2008, 2012, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா அடுத்த சிறந்த அணியாக 4 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், இறுதிப்போட்டி இந்தியா – இங்கிலாந்து மோதலாக ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிக் பாஸ் பிரபலத்துடன் ஹோட்டலில் யுஸ்வேந்திர சஹால்.. மீண்டும் கிசுகிசு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com