Bharat Taxi in india: இந்தியாவின் முதல் டாக்ஸி சேவையான ‘பாரத் டாக்ஸி’யை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார். இதில் ஓட்டுநர்களாக 150 பெண்கள் பதிவு செய்துள்ளனர்.
Bharat Taxi in india: இந்தியாவின் முதல் டாக்ஸி சேவையான ‘பாரத் டாக்ஸி’யை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார். இதில் ஓட்டுநர்களாக 150 பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

Published on: February 5, 2026 at 10:06 am
Updated on: February 5, 2026 at 4:12 pm
புதுடெல்லி, பிப்.5, 2026: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (வியாழக்கிழமை) நியூடெல்லியில் இந்தியாவின் முதல் ஒத்துழைப்பு அடிப்படையிலான பயண பகிர்வு தளமான பாரத் டாக்ஸியை தொடங்கி வைக்கிறார்.
இது ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், அனைவரையும் உள்ளடக்கிய குடிமக்கள் மையப்படுத்தப்பட்ட போக்குவரத்து தீர்வுகளை ஊக்குவிப்பதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில், “ஓட்டுநர்களின் உரிமை, செயல்பாடு மற்றும் மதிப்பு உருவாக்கத்தின் மையமாக வைக்கும். இதன் மூலம், அவர்கள் சுரண்டலான அகரிகேட்டர் (aggregator) அடிப்படையிலான மாடல்களிலிருந்து விடுபடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தளம் பூஜ்ய கமிஷன் மற்றும் இதர வரிகள் இல்லாத முறைப்படி இயங்கும். லாபங்கள் நேரடியாக ஓட்டுநர்களுக்கு பகிரப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர்களுக்கு சமூக பாதுகாப்பு
இதில் ஓட்டுநர்களுக்கு சமூக பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. அவை,
சுகாதார காப்பீடு
விபத்து காப்பீடு
ஓய்வூதிய சேமிப்பு
தனிப்பட்ட ஓட்டுநர் ஆதரவு அமைப்பு ஆகியவை அடங்கும் ஆகும். இதன் கீழ், தற்போது 150-க்கும் மேற்பட்ட பெண்கள் ஓட்டுநர்கள் பாரத் டாக்ஸியில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமல்ஹாசன் முதல் உரை.. வெடித்தது சர்ச்சை.. என்ன பேசினார் கமல்- நிர்மலா சீதாராமன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com