கமல்ஹாசன் முதல் உரை.. வெடித்தது சர்ச்சை.. என்ன பேசினார் கமல்- நிர்மலா சீதாராமன்?

Kamal Haasans First Rajya sabha Speech row: மாநிலங்களவை எம்.பி. நடிகர் கமல்ஹாசன் தனது முதல் உரையிலேயே தவறான தகவலை தெரிவித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

Published on: February 5, 2026 at 9:32 am

புதுடெல்லி, பிப்.5, 2026: நடிகரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் தனது முதல் பாராளுமன்ற உரையில், தமிழ் யாசகம் எடுக்க உதவாது என்றார்.

மேலும், இதை நிர்மலா சீதாராமன் உடன் தொடர்புபடுத்தி செய்திகள் பரப்பப்பட்டன. இந்நிலையில் இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் அலுவலகத்தில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், “இன்று மாநிலங்களவையில், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தமிழ் மொழியைப் பற்றி இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாகத் திரு. கமல்ஹாசன் ஒரு தவறான தகவலைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வில், நிதியமைச்சர் அவர்கள் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களின் கூற்றையே தெளிவாக மேற்கோள் காட்டினார்; அது அவருடைய சொந்தக் கருத்து அல்ல. இது குறித்த வீடியோ ஆதாரத்திற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக செய்தியை திரித்து வெளியிட்ட செய்தி நிறுவனம் ஒன்றும் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் விஜய்யின் த.வெ.க.வுக்கு திமுக மிரட்டல்.. அருண் ராஜ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com