Chennai Tragedy: சென்னை சோழிங்கநல்லூரில் தாய்-மகன் உயிரிழந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.
Chennai Tragedy: சென்னை சோழிங்கநல்லூரில் தாய்-மகன் உயிரிழந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.

Published on: February 3, 2026 at 2:35 pm
சென்னை, பிப்.3, 2026: சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள அவர்களது வீட்டில் 70 வயது மூதாட்டியும் அவரது 41 வயது மகனும் வெள்ளிக்கிழமை (ஜன.30, 2026) இறந்து கிடந்தனர். இந்த வழக்கில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, செம்மஞ்சேரி காவல்துறையினரின் கூற்றுப்படி, இறந்தவர்கள் பிரபு மற்றும் அவரது தாயார் ஜீபாபதி என அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள அண்ணா தெருவில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இதற்கிடையில், சினிமா ஆர்வலரான பிரபு, பல ஆண்டுகளாக திரைப்படத் துறையில் கால் பதிக்க முயன்று வந்ததாகவும், திரைப்படத் திட்டங்களில் முதலீடு செய்த பிறகு நிதி இழப்பை சந்தித்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், பிரபு திருமணமாகாமல் இருந்துள்ளார். தொடர்ந்து, தனது வாழ்வாதாரத்திற்காக அருகிலுள்ள தேநீர் கடையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில், ஜீபாபதி தனது மகனின் நிலைமை குறித்து மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு குறிப்பில், அவர்களின் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
இது குறித்து, பாரதிய நியாய் சன்ஹிதா (BNS) பிரிவு 194 இன் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Note: (தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணங்களை தவிர்க்க தமிழ்நாடு சுகாதார உதவி எண் 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050க்கு தொடர்பு கொள்ளவும்.)
இதையும் படிங்க: திடீர் மூச்சுத் திணறல்.. மூத்த கம்யூனிஸ்ட் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com