டி20 உலகக் கோப்பை வர்றோம்.. ஆனால் இந்தியாவுடன் ஆட மாட்டோம்.. பாகிஸ்தான்!

Pakistan Will Play World Cup But Not Against India: “பாகிஸ்தான் அணி டி-20 உலகக் கோப்பையில் பங்கேற்கும். ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்காது” என அறிக்கை வெளியிட்டுள்ளது.

Published on: February 2, 2026 at 12:11 pm

இஸ்லாமாபாத், பிப்.2, 2026: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து இறுதியாக அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (பிப்.1, 2026) அன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், “பாகிஸ்தான் அணி T20 உலகக் கோப்பையில் பங்கேற்கும். ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்காது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் டி-20 கிரிக்கெட் போட்டி, பிப்ரவரி 15 அன்று கொழும்பில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அறிவிப்பால், உலகக் கோப்பை அட்டவணையில் பெரிய மாற்றம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: தென் கொரிய வீராங்கனையை வீழ்த்திய இஷராணி.. புதிய நட்சத்திரம் உதயம்!

பாகிஸ்தான் பதில் என்ன?

பாகிஸ்தான் அரசு தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 2026 ஐ.சி.சி. டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கிறது. ஆனால், பிப்ரவரி 15, 2026 அன்று இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்காது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி கவலை

பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்காது என்று அறிவித்ததற்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கடும் கவலை தெரிவித்துள்ளது. மேலும், “ஒரு தேசிய அணி, உலகளாவிய போட்டியில் தேர்ந்தெடுத்து மட்டும் ஆடுவது, சர்வதேச விளையாட்டு நிகழ்வின் அடிப்படை விதிகளுக்கு முரணானது” எனக் கூறியுள்ளது.

தொடர்ந்து, “ உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அணிகள், ஒரே விதிமுறைகளின் கீழ், ஒப்புக்கொள்ளப்பட்ட அட்டவணைப்படி போட்டிகளில் பங்கேற்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெலிங்டன் இரவு விடுதி.. நான் மட்டும் தனியாக.. ஹாரி திடீர் யூ-டர்ன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com