சென்னை, பிப்ரவரி 2.2026; 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதிப்படுத்த தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற பொது தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது; இந்த தேர்தலில் இழந்த ஆட்சியை மீட்க அதிமுக உறுதி பூண்டுள்ளது. அதே நேரம், ஆட்சியைத் தக்க வைக்க மு.க ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த கால கூட்டணி அப்படியே தொடர வேண்டும் என்பதில் மு.க ஸ்டாலின் உறுதியாகவும் உள்ளார். திமுகவை பொருத்தமட்டில், காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி தொடர வேண்டும் என விரும்புகிறது.
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய வைகோ, ” திமுக நிச்சயமாக தனி பெரும்பான்மை பெறும்; 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆக பதவியேற்பார்” என்றார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு?
இதைத்தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் கோரிக்கை குறித்து பேசிய வைகோ, ” ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை நாங்கள் வைக்கவில்லை; அப்படி ஒரு கோரிக்கை வைக்க வேண்டிய நோக்கமும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க; தி.மு.க.வை திருப்திப்படுத்த.. அரைவேக்காடு.. திருமாவை கண்டித்த டி.டி.வி
Deepika Raja: “முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்” என மொத ராத்திரி பட நடிகை தீபிகா ராஜா தெரிவித்துள்ளார்….
Anna Seer Scheme: அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் 60,000 தங்க நாணயங்கள், பட்டுப் புடவைகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது….
Russia’s Support to India: இந்தியாவுக்கு உலக நாடுகள் மறுத்த உதவியை ரஷ்யா வழங்கியது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்….
Jailer 2 Box Office Collection: ரூ.816 கோடியைத் தாண்டிய ‘ஜெயிலர் 2’ திரைப்படம் 20 நாட்களில் புதிய வசூல் சாதனை படைத்து வருகிறது….
Cancer Drug Price Cut: புற்றுநோய் மருந்துகளின் விலை 70% வரை குறைக்கப்பட உள்ளது; நவ.9 முதல் புதிய விலை அமலாகிறது….
Mamitha Baiju: ரூ.919 கோடி வசூல் படங்களின் நாயகியான மமிதா பைஜு, காதல், நட்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்