டெல்லியில் மழைக்கு வாய்ப்பு.. மஞ்சள் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம்

Rain alert: டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.7°C ஆகக் குறைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி) மழை, பனிமூட்டம் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) வெளியிட்டுள்ளது.

Published on: January 31, 2026 at 3:50 pm

புதுடெல்லி, ஜன.31, 2026: டெல்லியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. மேலும், டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.7°C ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், டெல்லியின் காற்றுத் தரம் மோசமாகவே உள்ளது. இந்நிலையில், ஜ.எம்.டி விடுத்துள்ள எச்சரிக்கையில், மழை, பனிமூட்டம், இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐ.எம்.டி செய்திக் குறிப்பில், “டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை திடீரென அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரத்தில் மேகமூட்டம் நீடிப்பதால், குறைந்தபட்ச வெப்பநிலை 11–13 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேசியவாத காங்கிரஸ் ஒருங்கிணைப்பு.. அஜித் பவாரின் விருப்பம் இதுதான்.. ஷரத் பவார்

ஞாயிற்றுக்கிழமை (ஜன.31, 2026) டெல்லி குறைந்தபட்ச வெப்பநிலை: 11–13°C ஆக காணப்பட்டது. மேகமூட்டம் தொடர்வதால் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால், கடும் குளிர் நிலைமையிலிருந்து சிறிது தளர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஏ.க்யூ,இ.டபிள்யூ.எஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டெல்லியின் காற்றுத் தரம் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை மிக மோசமான நிலை (Very Poor Category) என இருக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பின் வரும் ஆறு நாட்களிலும், காற்றுத் தரம் மிகமிக மோசமானது முதல் மோசமானது என இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முறிந்து விழுந்த விமான சிறகு.. அஜித் பவர் மரணத்தில் ஒளிந்திருக்கும் மூன்று காரணம்.. முழுமையான அலசல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com