புதுடெல்லி, ஜன.31, 2026: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அரசு மீது விமர்சன ரீதியிலான தாக்குதல்கள் நடத்தின. குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் (MGNREGA) நீக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2026 அன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது வரலாற்றில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஆகும்.
இந்த அமர்வின் முதல் கட்டம் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 13 வரை, இரண்டாம் கட்டம் மார்ச் 9 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும். அந்த வகையில், மொத்தம் 30 அமர்வுகள் நடைபெறுகின்றன.
முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். அப்போது, வெளிநாட்டு கொள்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை (MGNREGA) விக்ஸிட் பாரத் ஜி ராம் ஜி (VB G RAM G) என மாற்றியது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினார்கள்.
அப்போது மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் திட்டம் நீக்கப்பட்டதால் கிராமப்புற மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி கடுமையாக விமர்சித்தனர்.
இதையும் படிங்க: ரூ.20 லட்சம் வரை வருமான வரி இல்லை? மூத்தக் குடிமக்களுக்கு தனி வருமான வரம்பு?
Sai Pallavi: சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது என நடிகை சாய் பல்லவி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்….
Gold Prices Fall: தங்கத்தின் விலை 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது….
Pa. Ranjith: பொங்கல் 2027-ல் வெளியாகிறது பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ திரைப்படம்….
Chennai Fuel Price Today: சென்னையில் நவம்பர் 1ஆம் தேதியான இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை….
Yogi Babu: யோகிபாபுவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள, சிங்காரம்மா திரைப்படம் நரிக்குறவர் மக்களின் வாழ்வுரிமை, சுயமரியாதையைப் பேசுகிறது….
CM Vijay: நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ் பெற முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்