வெள்ளையன் மரணம்: டி.டி.வி தினகரன் இரங்கல்

Tamil Nadu | “தமிழக வணிகர்களின் பாதுகாவலராகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன்” மரணத்துக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Published on: September 10, 2024 at 4:34 pm

Updated on: September 10, 2024 at 4:39 pm

Tamil Nadu | தமிழக வணிகர்களின் பாதுகாவலராகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது” என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் டி.டி.வி தினகரன், “தமிழக வணிகர்களின் பாதுகாவலராகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. வெள்ளையன் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் சக வணிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த த. வெள்ளையன் இன்று காலமானார். அவருக்கு வயது 76. த. வெள்ளையனுக்கு நுரையீரல் தொற்று காணப்பட்டது. இதற்காக அவர் சென்னை எம்.ஜி.எம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இலங்கை, ஆஸி, தாய்லாந்து, மலேசியா.. சென்னையில் இருந்து போதைப் பொருள் கடத்தல்: பட்டியலிட்ட அன்புமணி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com