Trump’s Aircraft Emergency Landing : அமெரிக்க அதிபர் டிரம்ப சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Trump’s Aircraft Emergency Landing : அமெரிக்க அதிபர் டிரம்ப சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Published on: January 21, 2026 at 1:25 pm
வாஷிங்டன், ஜன. 21 2026: டாவோஸ் உலக பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டார். அப்போது விமானத்தில் சிறிய மின்சார கோளாறு ஏற்பட்டது.
விமானம் வாஷிங்டன் அருகே ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
தரையிறங்கியதும் டிரம்ப் மாற்று விமானத்தில் உடனடியாக புறப்பட்டார். பாதுகாப்பு வாகனங்கள் அவசரமாக தளத்திற்கு விரைந்தன. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
சிறிய அளவிலான எலக்ட்ரிக்கல் கோளாறு ஏற்பட்டுள்ளது என விமானப்படை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து டிரம்ப் பாதுகாப்பாக டாவோஸுக்கு சென்றார்.
இதையும் படிங்க: காசா அமைதி வாரியம்.. பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com