India Meteorological Department | டெல்லியில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
January 14, 2026
India Meteorological Department | டெல்லியில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: September 10, 2024 at 3:35 pm
India Meteorological Department | டெல்லியில், செவ்வாய் கிழமை (செப்.10, 2024) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதேநேரம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒடிசாவின் உள்பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வடக்கு சத்தீஸ்கர் முழுவதும் நகரும் என்றும், செப்டம்பர் 10 மாலைக்குள் மேலும் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றின்படி, பல மாநிலங்களில் வரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஏழு நாட்களுக்கு சத்தீஸ்கரில், மத்திய மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் மற்றும் கோவாவில் செப்டம்பர் 10 வரை மழை பெய்யக்கூடும்.
அதேநேரம், கேரளா மற்றும் மாஹே உள்ளிட்ட மாநிலங்களில் செப். 11ஆம் தேதி வரையும் கனமழை பெய்யக்கூடும். அதே தினத்தில் கோவா மற்றும் கொங்கனிலும் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆந்திரா, ஹைதராபாத் செல்லும் ரயில்களில் முக்கிய மாற்றம்: தென்னக ரயில்வே
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com