Fog in Delhi: டெல்லியில் இன்றும் நாளையும் குளிர் அலை வீசக்கூடும் எனவும், காற்றின் தரம் மிகவும் மோசமானதாக இருக்கும் எனவும், பனிமூட்டம் நிலவும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Fog in Delhi: டெல்லியில் இன்றும் நாளையும் குளிர் அலை வீசக்கூடும் எனவும், காற்றின் தரம் மிகவும் மோசமானதாக இருக்கும் எனவும், பனிமூட்டம் நிலவும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: December 30, 2025 at 4:16 pm
புதுடெல்லி, டிச.30, 2025: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (டிச.31, 2025) வரை ஹரியானா, சண்டிகர், மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாபில் காலை மற்றும் இரவு நேரங்களில் மிகக் கடும் பனிமூட்டம் நிலவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “இன்று (செவ்வாய்க்கிழமை) ஜம்மு காஷ்மீர், லடாக், கில்கிட், பல்திஸ்தான், முசஃபராபாத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பனிமூட்டம் காணப்படும்” எனவும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, “நாளை வரை டெல்லி, ஜார்கண்ட் மற்றும் அருணாசலப் பிரதேசத்திலும் இதே நிலை தொடரும் என முன்னறிவித்துள்ளது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மேற்கு மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் இன்று தனித்தனியான பகுதிகளில் கடும் குளிர் அலை நிலவும் வாய்ப்பு உள்ளது” எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரம்
டெல்லி-என்சிஆர் பகுதியில் காற்று தரம் “மிகவும் மோசமான” நிலையில் உள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, இன்று காலை 6 மணிக்கு தேசிய தலைநகரின் சராசரி காற்று தரக் குறியீடு (AQI) 384 ஆக பதிவாகியுள்ளது.
குளிர் அலை
பனிமூட்டம், குளிர் அலை, மற்றும் மோசமான காற்று தரம் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க : மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சியமைக்கும்.. அமித் ஷா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com