NTK party: நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
NTK party: நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: December 15, 2025 at 6:51 pm
சென்னை, டிச.15, 2025: தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கட்சிகள் தேர்தல் பரப்புரை மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்புக்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் டிச.27ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இந்தக் கூட்டம் சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது. பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது தலைமையை ஏற்கும் கட்சி உடன் மட்டுமே கூட்டணி என அறிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், பா.ம.க, தே.மு.தி.க, டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இன்னமும் தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராதாபுரம் அ.தி.மு.க. வேட்பாளர் யார்? விருப்ப மனு சமர்பித்த சௌந்தரராஜன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com