Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பயணத்தை இன்று (டிச.15, 2025) தொடங்கினார்.
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பயணத்தை இன்று (டிச.15, 2025) தொடங்கினார்.

Published on: December 15, 2025 at 4:48 pm
புதுடெல்லி, டிச.15, 2025: பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமான் ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவரது பயணத்தின் முதல் கட்டமாக, ஜோர்டான் மன்னர் அப்துல்லா II இப்ன் அல் ஹுசைன் அவர்களின் அழைப்பின் பேரில் மோடி ஜோர்டான் செல்கிறார்.
இந்நிலையில், ஜோர்டான் மன்னர் அப்துல்லா மற்றும் ஜோர்டான் பிரதமர் ஜாஃபர் ஹசன் ஆகியோருடன் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறும் என பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், அம்மானில் உள்ள இந்திய சமூகத்தினரையும் சந்திக்கிறார். இந்தியா–ஜோர்டான் உறவுகளை வலுப்படுத்துவதில் அவர்கள் முக்கிய பங்களிப்பு செய்துள்ளனர். இந்த பயணம், இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுகள் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நடைபெறுகிறது.
எத்தியோப்பியா பயணம்
அம்மானிலிருந்து, பிரதமர் செவ்வாய்க்கிழமை (டிச.16, 2025) எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவுக்கு செல்கிறார். அங்கு எத்தியோப்பியா பிரதமர் டாக்டர் அபி அஹ்மத் அலியுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளது. மேலும், இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து, பாராளுமன்றத்தின் கூட்டு அமர்வில் உரையாற்றுகிறார்.
ஓமன் பயணம்
இதையடுத்து, பிரதமர் புதன்கிழமை ஓமான் தலைநகரான மஸ்கட் நகரை அடைகிறார். இந்த பயணம், இந்தியா–ஓமான் தூதரக உறவுகள் நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கிறது. மஸ்கட்டில், ஓமான் சுல்தானுடன் கலந்துரையாடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com