Andhra Pradesh bus accident 2025: ஆந்திராவின் அல்லூரி சீதா ராமராஜூ மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் சிக்கி 9 பேர் மரணம் அடைந்தார்கள்.
Andhra Pradesh bus accident 2025: ஆந்திராவின் அல்லூரி சீதா ராமராஜூ மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் சிக்கி 9 பேர் மரணம் அடைந்தார்கள்.

Published on: December 12, 2025 at 5:49 pm
அமராவதி, டிச.12, 2025: ஆந்திரா மாநிலத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் இன்று அதிகாலை (டிச.12, 205) பெரிய விபத்து ஏற்பட்டது. அதாவது, தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சிந்தூர்–மரேடுமில்லி மலைச்சரிவு சாலையில் பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 22 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நேரத்தில் பேருந்தில் மொத்தம் 35 பயணிகள் மற்றும் 2 டிரைவர்கள் இருந்தனர்.
பேருந்து டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் சாலையிலிருந்து பள்ளத்தாக்கில் விழுந்து கவிழ்ந்தது. இந்த சம்பவம், சிந்தூர்–மரேடுமில்லி மலைச்சரிவு சாலையில் துலசிபாகா கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது நடந்தது. உள்ளூர் மக்கள் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் சிந்தூர் பகுதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதில் தீவிரமாக காயமடைந்த 5 பயணிகள் பத்ராசலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்க அளவு பேர் சித்தூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களைச் சேர்ந்த யாத்திரிகர்கள் ஆவர். இந்த விபத்து குறித்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அமித் பார்டர் கூறுகையில், “விபத்து அதிகாலை சுமார் 4:30 மணியளவில் ஏற்பட்டது” என்றார்.
இதையும் படிங்க : மணிப்பூரில் ஜனாதிபதி திரௌபதி முர்மு.. புதிய திட்டங்கள் தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com