Shivraj Singh Chouhan: கடந்த 10 ஆண்டுகளில் பயிர் உற்பத்தி 44 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கூறினார்.
Shivraj Singh Chouhan: கடந்த 10 ஆண்டுகளில் பயிர் உற்பத்தி 44 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கூறினார்.

Published on: December 12, 2025 at 4:32 pm
Updated on: December 12, 2025 at 5:18 pm
புதுடெல்லி,டிச.12, 2025: மாநிலங்களவை கேள்வி நேரத்தில் கூடுதல் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், “கடந்த 10 ஆண்டுகளில் பயிர் உற்பத்தி 44 சதவீதம் அதிகரித்துள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “2014 முதல் 2024 வரை புதிய விதை வகைகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட விவசாய முறைகள் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக இது சாத்தியமாகியுள்ளது. வேளாண்மை துறையின் முழுமையான முன்னேற்றத்தை உறுதி செய்ய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.
மேலும், “விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதிலும், வேளாண்மையின் மொத்த வளர்ச்சியை முன்னேற்றுவதிலும் மோடி அரசு கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.
ரூ.4 லட்சம் கோடி…
இதையடுத்து, “அரசு விவசாயிகளுக்கு இரண்டு இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உர உதவித்தொகையை வழங்கி வருகிறது. பிரதம மந்திரி கிசான் சன்மான் நிதி திட்டத்தின் கீழ் நான்கு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், பிரதம மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், ஒரு இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு விவசாயிகளின் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது” என்றும் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.
இதையும் படிங்க : 91வது வயதில் மரணம்.. யார் இந்த சிவ்ராஜ் பாட்டீல்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com