Thoothukudi: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் பயனாளி ஒருவருக்கு வீடு மற்றும் பசு மாடு வழங்கினார்.
Thoothukudi: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் பயனாளி ஒருவருக்கு வீடு மற்றும் பசு மாடு வழங்கினார்.
Published on: October 10, 2025 at 10:25 pm
தூத்துக்குடி, அக்.10, 2025: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தூத்துக்குடியில் பயனாளி ஒருவருக்கு வீடு மற்றும் பசு மாடு” வழங்கினார்.
இது குறித்த ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர், “கடந்த வருடத்தில், பருவ மழையின் போது ஏற்பட்ட கடுமையான பாதிப்பினால், தூத்துக்குடி மாவட்டம் கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர், தனது வீட்டினை இழந்திருந்தார். அப்போது, அவர்களுக்கு புதிதாக வீடு கட்டித்தருவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டை பயனாளிக்கு வழங்கியதுடன், கோமாதாவின் அருள் கிடைக்க வாழ்த்தி பசுவும், கன்றுக்குட்டியும் புதிய இல்லத்தின் சாவியோடு சேர்த்து வழங்கி வாழ்த்தினோம்.
மேலும், அந்த திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்த்தோம். அதைத், தொடர்ந்து தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மகளிர் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினோம்” என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : உதயநிதி காலில் விழுந்த தி.மு.க மூத்த எம்.எல்.ஏ.. திண்டுக்கல்லில் என்ன நடந்தது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com