No ban on beef in Goa: கோவாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை மறுத்துள்ளார் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஹன் கவுன்டே.
No ban on beef in Goa: கோவாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை மறுத்துள்ளார் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஹன் கவுன்டே.
Published on: October 10, 2025 at 2:32 pm
பனாஜி, அக்.10, 2025: கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஹன் கவுன்டே, மாநிலத்தில் மாட்டிறைச்சியை தடை செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், கோவா நிர்வாகம் மாநிலத்தை ஆன்மீக சுற்றுலா மையமாக மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றார்.
தொடர்ந்து, உணவு சமையல் சுதந்திரமும் சமூக நல்லிணக்கமும் கோவாவின் விருந்தோம்பலுக்கு மையமாக உள்ளன என்று அவர் வலியுறுத்தினார்.
மாநில அரசின் ஆன்மீக சுற்றுலா விருப்பங்கள் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்குமா, குறிப்பாக கோவாவில் மாட்டிறைச்சி மீது தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இது குறித்து மேலும் பேசிய அமைச்சர், “நாங்கள் சமூக நல்லிணக்கத்தின் வடிவத்தில் வாழ்கிறோம். எனவே தீபாவளி, சதுர்த்தி அல்லது கிறிஸ்துமஸ் என எதுவாக இருந்தாலும், நாம் ஒருவருக்கொருவர் அவர்களின் இடத்திற்குச் சென்று அன்பை பரிமாறிக் கொள்கிறோம்” என்றார்.
மேலும், “நாம் விரும்பும் விதத்தில் ஒருவருக்கொருவர் அவர்களின் உணவு வகைகளை அனுபவிக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க : உலகின் ஸ்திரத்தன்மை.. காஸா அமைதி திட்டம்.. மோடி-ஸ்டார்மர் பேச்சு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com