Delhi rains: டெல்லியில் இன்று (அக்.7, 2025) பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இது தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Delhi rains: டெல்லியில் இன்று (அக்.7, 2025) பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இது தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Published on: October 7, 2025 at 8:44 pm
புதுடெல்லி, அக்.7, 2025: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் (NCR) செவ்வாய்க்கிழமை (அக்.7, 2025) பலத்த கன மழை பெய்தது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் நகரின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tundla, Firozabad, Shikohabad (U.P.) Bhiwari, Tizara, Khairthal, Kotputli, Viratnagar, Rajgarh, Mahawa, Mahandipur Balaji, Dholpur (Rajasthan) during the next 2 hours. pic.twitter.com/qLOgUhEsYb
— RWFC New Delhi (@RWFC_ND) October 7, 2025
அதாவது, இந்திய வானிலை ஆய்வு மையம், “வடக்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, மத்திய டெல்லி, புது டெல்லி, தெற்கு டெல்லி, தென்கிழக்கு டெல்லி மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது”. தொடர்ந்து, “பிராந்தியப் பகுதிகளில் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலைத் துறையின் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர்.. உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
மேலும், குருக்ஷேத்ரா, கைதல், நர்வானா, ஃபதேஹாபாத், பானிபட், கன்னூர், ஜஜ்ஜார், கோசாலி, மஹேந்தர்கர், சோஹானா, ரேவாரி, நர்னால், பவல், நூ, ஷாம்லி, கந்த்லா, பாரௌத், பிலகுவா, சிர்ஸ்கந்த்ர ரவாபாத், சித்கந்த்ர ரவாபாத், சித்கந்த்ர ராவாபாத், ஆகிய இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விமான சேவை பாதிப்பு?
டெல்லி விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “டெல்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம். எங்கள் களக் குழுக்கள் அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து சீரான மற்றும் திறமையான பயணிகள் அனுபவத்தை உறுதி செய்வதற்காக விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 75 வயதில் 35 வயது பெண்ணுடன் திருமணம்.. மறுநாள் காத்திருந்த அதிர்ச்சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com