uttar pradesh | லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
uttar pradesh | லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
Published on: September 7, 2024 at 9:45 pm
uttar pradesh | உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகரில் 3 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர். பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் எனக் அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் இதுவரை 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபர்களின் அடையாளத்தை கண்டறிவதில் சிக்கல் நிலவுகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர், ““இந்த சம்பவம் மாலை 5 மணியளவில் நிகழ்ந்தது. இந்த கட்டிடம் ஒரு கிட்டங்கியாக பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றார். சம்பவம் aகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் பேசுகையில், “மூன்று மாடி கட்டிடத்தில் சில கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது” என்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : புற்றுநோயை ஏற்படுத்தும் கோனாகார்பஸ் மரங்களை அரசே வளர்ப்பதா? மருத்துவர் ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com