Karur stampede : கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் இன்று (திங்கள்கிழமை) விசாரணையை தொடங்கியது.
Karur stampede : கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் இன்று (திங்கள்கிழமை) விசாரணையை தொடங்கியது.
Published on: September 29, 2025 at 2:27 pm
கரூர், செப்.29, 2025: கரூரில் சனிக்கிழமை (செப்.27, 2025), விஜய் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழக பேரணியில் திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலே குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் பலியானார்கள். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இது தொடர்பான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தார்.
இதையடுத்து நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணையை தொடங்கினார். கூட்ட நெரிசல் விபத்து நடந்த பகுதிகளில் அவர் விசாரணையை தொடங்கினார்.
41 பேர் மரணம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக பேரணியில் இறந்த 41 பேரில் 18 பெண்கள், 13 ஆண்கள், ஐந்து இளம் பெண்கள் மற்றும் ஐந்து சிறுவர்கள் அடங்குவர்.இவர்களில் 34 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், தலா இரண்டு பேர் ஈரோடு, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இழப்பீடு
இந்தத் துயரத்தை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், துயரத்தில் உயிர்களை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இறந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் அறிவித்தார்.த.வெ.க சார்பில் நீதிமன்றத்தில் மனுஇதற்கிடையில், கரூர் கூட்ட நெரிசல் குறித்து சுயாதீன விசாரணை நடத்தக் கோரிய விஜய்யின் மனு இன்று மாலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கைது செய்யப்படுவாரா விஜய்? மு.க ஸ்டாலின் பதில் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com