திருநெல்வேலி, செப்.29, 2025: எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் ஞாயிற்றுக்கிழமை (செப்.28, 2025) விடுத்துள்ள அறிக்கையில், “கரூர் துயர சம்பவம் தொடர்பாக விரைவான விசாரணையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து இழப்பீடும் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், “கரூரில் தவெக தலைவர் விஜய் அவர்களின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரமான சம்பவத்தில், கூட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாபெரும் துயரத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தப் பேரவலத்தில் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு, எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் முழுமையாக குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இத்தகைய இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுடன் எஸ்டிபிஐ கட்சி துணைநிற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தவெக தலைவர் விஜய் அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் விரைவான இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இத்தகைய துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, பொதுக்கூட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க :கைது செய்யப்படுவாரா விஜய்? மு.க ஸ்டாலின் பதில் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்