Tilak Varma: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆட்ட நாயகனாக திலக் வர்மா தேர்வானார்.
Tilak Varma: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆட்ட நாயகனாக திலக் வர்மா தேர்வானார்.
Published on: September 29, 2025 at 11:52 am
அமராவதி, செப்.29, 2025: ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, இந்திய கிரிக்கெட்டர் திலக் வர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ட்விட்டர் எக்ஸில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “என்ன ஒரு நட்சத்திரம்! நம் தெலுங்கு பையன் திலக் வர்மா, போட்டியை வென்ற இன்னிங்ஸுடன் மைதானத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொண்டார். அவரது அமைதியும் புத்திசாலித்தனமும் ஊக்கமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஆட்ட நாயகன் திலக் வர்மா
ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டி துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் நிதானமாக ஆடி 69 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் நின்று இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். இந்தப் போட்டியில் திலக் வர்மா ஆட்ட நாயகன் ஆக தேர்வானார். தொடர் நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார்.
இந்த நிலையில் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் திலக் வர்மாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். திலக் வர்மா ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் என்ற போதிலும் இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா.. 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.. யார் இந்த திலக் வர்மா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com