Diya Suriya: நடிகர் சூர்யாவின் மகள் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் யார் நடிகர் தெரியுமா?
Diya Suriya: நடிகர் சூர்யாவின் மகள் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் யார் நடிகர் தெரியுமா?
Published on: September 27, 2025 at 5:17 pm
சென்னை, செப்.27, 2025: 2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் டாக்கு டிராமா குறும்படம் “லீடிங் லைட்”. இந்தப் படத்தின் மூலம் சூர்யா ஜோதிகாவின் மகள் தியா டைரக்டராக அறிமுகமாகியுள்ளார்.
இந்தப் படம் திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி – டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. அதாவது படத்தின் நாயகன், திரைக்கு பின்னால் இருக்கும் நபர்கள்தான்.
இதையும் படிங்க : தி பாரடைஸ் படத்தின் வில்லன் இந்த நடிகரா? கெத்தாக வெளியான போஸ்டர்!
தியா சூர்யாவுக்கு பாராட்டு
உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை குவித்து வரும் இப்படம் ஆஸ்கார் தகுதி ஓட்டத்திற்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் ரிஜென்சி தியேட்டரில் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது.
அறிமுக இயக்கத்திலேயே, ஆஸ்கர் வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் தியா சூர்யாவுக்கு, பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நீச்சல் உடையில் சாய் பல்லவி.. ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com