Stock Market Today: ஆசிய பங்குச் சந்தைகளைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தையும் இன்று சரிந்து காணப்பட்டது. சென்செக்ஸ் 350 புள்ளிகளும், நிஃப்டி 102 புள்ளிகளும் சரிந்தன.
Stock Market Today: ஆசிய பங்குச் சந்தைகளைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தையும் இன்று சரிந்து காணப்பட்டது. சென்செக்ஸ் 350 புள்ளிகளும், நிஃப்டி 102 புள்ளிகளும் சரிந்தன.
Published on: September 24, 2025 at 10:18 am
மும்பை, செப்.24, 2025: இந்திய பங்குச் சந்தைகள் இன்று (புதன்கிழமை) காலை அமர்வில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் அல்லது 0.43 சதவீதம் சரிந்தது.
அதே நேரத்தில் நிஃப்டி 102 புள்ளிகள் அல்லது 0.41 சதவீதம் குறைந்து 25,067 இல் வர்த்தகமானது. பங்குச் சந்தை, தொடக்க வர்த்தகத்தில் சென்செக்ஸ் 185 புள்ளிகள் சரிந்து 81,917 இல் தொடங்கியது. இதற்கிடையில், நிஃப்டி 50 புள்ளிகள் குறைந்து 25,108 இல் நாள் தொடங்கியது.
காலை வர்த்தகத்தில் ஐடி, எஃப்எம்சிஜி, தனியார் வங்கி, ஆட்டோ, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட முக்கிய துறைகள் சரிவில் வர்த்தகம் செய்யப்பட்டன.
நிஃப்டி ஐடி 0.81 சதவீதம் குறைந்து 34,963 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. இதற்கிடையில், நிஃப்டி எஃப்எம்சிஜி காலை 9:30 மணியளவில் 0.19 சதவீதம் குறைந்து 55,174 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : புதிய ஜி.எஸ்.டி.. சோப்பு, ஷாம்பூ முதல் கார் வரை.. எந்தப் பொருள்கள் விலை குறையும்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com