Tamilisai Soundararajan | தலைமை ஆசிரியருக்கு பதில் அமைச்சரை மாற்ற வேண்டும் என தமிமிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
February 6, 2025
Tamilisai Soundararajan | தலைமை ஆசிரியருக்கு பதில் அமைச்சரை மாற்ற வேண்டும் என தமிமிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
Published on: September 6, 2024 at 10:13 pm
Tamilisai Soundararajan | சென்னை அசோக்நகர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுதல் என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேச்சாளர் ஆன்மிகம் தொடர்பாக பேசினார். அப்போது ஆசிரியர் ஒருவர் குறுக்கீட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.
அந்தப் பேச்சாளர் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் உங்கள் பெயர் என்ன? என பதில் கேள்வி கேட்டார். ஆனால் அவர் அதற்கு பதில் கூறவில்லை. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாற்றுத்திறனாளி என்றும், பேச்சாளர் மகா விஷ்ணுவின் பேச்சு அவரை காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பேச்சாளர் மகா விஷ்ணு, மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும், இனி வரும் காலங்களில், பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு அவசியமற்ற இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறையை பலரும் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்வதற்கு பதிலாக அமைச்சரை மாற்ற வேண்டும்.
இந்த விஷயத்தில் தலைமை ஆசிரியரை பலிகிடா ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறை சரியான பாதையில் செல்கிறதா? எனத் தெரியவில்லை. எந்த வழிமுறை மற்றும் விதிமுறை இன்றி பள்ளிக் கல்வித் துறை செயல்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : திருநெல்வேலி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com