Chennai: காஞ்சிபுரம் டூ கோயம்பேடு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மத்திய அரசு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Chennai: காஞ்சிபுரம் டூ கோயம்பேடு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மத்திய அரசு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Published on: September 23, 2025 at 12:33 pm
Updated on: September 23, 2025 at 12:41 pm
சென்னை, செப்.22, 2025: அரசுப் பேருந்தில் 17 வயது கல்லூரி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் மத்திய அரசு வேளாண் துறை அதிகாரி ஒருவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்த மாணவி, காஞ்சிபுரத்திலிருந்து கோயம்பேடு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, பயணத்தின் போது அவர் தூங்கிவிட்டதால், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த பயணி ஒருவர் அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மாணவி புகார்- கைது
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக பேருந்து ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தார், அவர் வாகனத்தை மதுரவாயல் காவல் நிலையத்திற்கு திருப்பிவிட்டார். இதையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, மத்திய வேளாண் துறையில் விற்பனை அதிகாரியாக பணிபுரியும் திருச்சியைச் சேர்ந்த ராகேஷ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க :17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. யோகா மாஸ்டர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com