சென்னை, செப்.15, 2025: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உதவித்தொகை கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பயனாளிக்கு பதிலாக உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளாக கிடைத்துள்ளது. இது குறித்து, கோவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதாவது, பயனாளியின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண்ணில் ஏற்பட்ட தவறுதான் குழப்பத்திற்கு வழிவகுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதாவது, கொண்டம்பட்டியைச் சேர்ந்த பயனாளியான ஆர். மகேஸ்வரி (50) என்பவருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கவிருந்த நிலையில், அது, உத்தரப் பிரதேச பெண்ணின் கணக்கில் இரண்டு ஆண்டுகளாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இது, “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மகேஸ்வரி கூறுகையில், “நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு மகளிர் உரிமைத் தோகை உதவித் தொகைக்கு விண்ணப்பித்தேன். நிதி கிடைக்காதபோது, எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினேன்” என்றார்.
மேலும், “உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எனது பெயரை மீண்டும் திட்டத்தில் சேர்க்குமாறு ஒரு மனுவை சமர்ப்பித்தேன். எனது மனுவை பரிசீலித்த பிறகு, நான் ஏற்கனவே திட்டத்தில் பயன்பெறுவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், எனது ஆதார் விவரங்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வேறு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தேன்.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நபரின் கணக்கில் மாதா மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, வங்கி அதிகாரிகள் எனது விசாரணைகளை முறையாகக் கவனிக்கவில்லை” என்றார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : விஜய் வெல்வாரா என்பதை சொல்ல முடியாது.. கார்த்தி ப சிதம்பரம்!
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (செப்டம்பர் 16, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 என உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் பயனடைந்துள்ளார்….
Waqf Amendment Act: மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம் கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கிய திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தடை விதித்தது….
Karthi P Chidambaram: நடிகர் விஜய் அரசியலில் வெல்வாரா என்பதை சொல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி கார்த்தி ப. சிதம்பரம்….
Chennai: சென்னை ஆவடியில் 35 வயது மனைவியை குத்தி விட்டு, அவரது கணவர் தற்கொலை மூலமாக உயிரை மாய்த்துக் கொண்டார்….
Auto driver dies after being bitten by a dog: ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தும் வெறிநாய்க்கடியால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை…