சிறுநீரகக் கொள்ளை பதற்றம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு? பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்

“சிறுநீரகக் கொள்ளை பதட்டம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Published on: August 19, 2025 at 10:29 pm

சென்னை, ஆக.19 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்டத்தில் பெருமளவில் சிறுநீரகக் கொள்ளை நடந்ததால் மக்களிடம் ஏற்பட்ட அச்சமும், பதட்டமும் விலகுவதற்கு முன்பாகவே , அதே மாவட்டத்தில் ஏழைகளைக் குறிவைத்து கல்லீரல் திருட்டும் நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
போதைப் பொருள் விற்பனையில் தொடங்கி மனித உடல் உறுப்புத் திருட்டு வரை அனைத்து சட்டவிரோத செயல்களையும் திமுக அரசு ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்க அறிக்கையில், “நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரத்தைச் சேர்ந்த 37 வயது பெண்மணி ஒருவர் கந்து வட்டிக்கு வாங்கியக் கடனை அடைக்க முடியாமல் தடுமாறி வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவரை அணுகிய தரகர்கள் அவரது சிறுநீரகத்திற்கு ரூ.8 லட்சம் விலை பேசியுள்ளனர். அவரை சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆய்வு செய்த போது அவரது சிறுநீரகத்த்தை மாற்ற முடியாது என்று தெரியவந்துள்ளது. அதனால், அவருக்கு மருத்துவ ஆய்வு செய்ய ஆன செலவுகளை தரும்படி அந்த பெண்ணை மிரட்டிய தரகர்கள், ஒரு கட்டத்தில் அவரது கல்லீரலை எடுத்துக் கொண்டு அதற்காக ரூ.4.5 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இரத்த உறவு இல்லாதவர்களுக்கு உடல் உறுப்புகளைக் கொடையாக வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து விதிகளையும் மீறி நாமக்கல் மாவட்டத்தில் வறுமையில் வாடும் மக்களை மூளைச்சலவை செய்து அவர்களின் சிறுநீரகங்களை திருடியுள்ளனர். சிறுநீரகத்தை எடுக்க முடியாத நிலையில் கல்லீரலைத் திருடியுள்ளனர். அப்படியானால், தமிழ்நாட்டில் உடல் உறுப்பு வணிகம் எந்த அளவுக்கு வெளிப்படையாக நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “தமிழ்நாட்டில் போதை மருந்துக் கடத்தல் முதல் உடல் உறுப்புத் திருட்டு வரை அனைத்தையும் செய்பவர்கள் திமுகவுடன் சம்பந்தப்பட்டவர்கள் தான். இத்தகைய சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டிய திராவிட மாடல் அரசு அத்தகைய குற்றங்களுக்கு துணை போகிறது. தமிழ்நாட்டில் ஏழை மக்களின் உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனை ஆகும். இதற்கெல்லாம் சேர்த்து வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக்கழக நிர்வாகி சென்னையில் படுகொலை.. பகிர் சிசிடிவி காட்சிகள்.. யார் இந்த கண்ணன்? TVK Functionary Murdered

தமிழக வெற்றிக்கழக நிர்வாகி சென்னையில் படுகொலை.. பகிர் சிசிடிவி காட்சிகள்.. யார் இந்த

TVK Functionary Murdered : ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர், அதிமுகவில் 174-வது தெற்கு வட்டக் கழகச் செயலாளராக இருந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு…

தலித், BC, சிறுபான்மையின மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு.. சித்தராமையா வலியுறுத்தல்! Siddaramaiah 75% reservation proposal

தலித், BC, சிறுபான்மையின மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு.. சித்தராமையா வலியுறுத்தல்!

Siddaramaiah 75% reservation proposal: பெங்களூருவில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பேசிய அவர், “இது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல; சமூக சமநிலையை நிலைநிறுத்தும் அவசியமான…

வெளிப்படையான அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.. அமைச்சர் கீர்த்தனா! Minister Keerthana

வெளிப்படையான அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.. அமைச்சர் கீர்த்தனா!

Minister Keerthana : கடந்த கால அரசுகள் போல் அல்லாமல் வெளிப்படையான அரசாங்கத்தை நடத்தி வருகிறோம் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்….

சனாதன எதிர்ப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவனம்.. அமைச்சர் வன்னி அரசு! Vanni Arasu

சனாதன எதிர்ப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவனம்.. அமைச்சர் வன்னி அரசு!

Vanni Arasu : சனாதன எதிர்ப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவனம் செலுத்தி வருகிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார் அமைச்சர் வன்னி அரசு….

10,000-க்கும் மேற்பட்ட வளையல்கள் ஒரே இடத்தில்! ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழா அறிவித்த விபிஜே VBJ Bangle Fest

10,000-க்கும் மேற்பட்ட வளையல்கள் ஒரே இடத்தில்! ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழா அறிவித்த

VBJ Bangle Fest: 10,000-க்கும் மேற்பட்ட வளையல் வடிவமைப்புகளுடன் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழாவை VBJ அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5 வரை நடைபெறும்…

பிரதமர் வேட்பாளரா விஜய்? செங்கோட்டையன் அதிரடி பதில்! Sengottaiyan

பிரதமர் வேட்பாளரா விஜய்? செங்கோட்டையன் அதிரடி பதில்!

Sengottaiyan: பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் விஜய் தவெகவினரால் முன் நிறுத்தப்படுகிறாரா என்ற கேள்விக்கு, செங்கோட்டையன் பதிலளித்தார்….

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com