Gold Rate Today: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.9,275 என நிர்ணயிக்கப்பட்டு, 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் விலை ரூ.74 ஆயிரத்து 200 என காணப்படுகிறது.
Gold Rate Today: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.9,275 என நிர்ணயிக்கப்பட்டு, 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் விலை ரூ.74 ஆயிரத்து 200 என காணப்படுகிறது.
Published on: August 17, 2025 at 11:48 am
சென்னை, ஆக.17 2025: சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 24 காரட் தூயத் தங்கத்தின் விலை கிராம் ரூ.10,118 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் ரூ.80 ஆயிரத்து 944 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
22 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.9,275 என நிர்ணயிக்கப்பட்டு, 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் விலை ரூ.74 ஆயிரத்து 200 என காணப்படுகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இது கிராமுக்கு ரூ.5 சரிவாகும்.
நேற்று (ஆக.16 2025) கிராம் ரூ.9,280 என நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.74 ஆயிரத்து 240 என காணப்பட்டது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தமட்டில் கிராம் ரூ.127 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 27 ஆயிரமாக காணப்படுகிறது. வெள்ளியை பொருத்தமட்டில் ஆக.14ஆம் தேதியில் இருந்து இதே விலையில் காணப்படுகிறது.
எனினும் ஆக.12ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.126 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கடந்த காலங்களில் வெள்ளி விலை ரூ.100ல் இருந்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 3 ஆண்டு முதலீடு செய்தால் போதும்.. 8.50 சதவீதம் ரிட்டன்.. பெஸ்ட் எஃப்.டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com