Hair loss Remedies: முடி உதிர்தலை நிறுத்தவும், எலும்பு மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த மீனை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடுங்கள்.
Hair loss Remedies: முடி உதிர்தலை நிறுத்தவும், எலும்பு மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த மீனை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடுங்கள்.
Published on: July 2, 2025 at 11:36 am
சென்னை, ஜூலை 2 2025: இந்திய உணவு வகைகளில் மீன் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. அதிலும், பிரபலமான மீன் உணவு தேர்வுகளில் ஹில்சா (Hilsa), போல் (Boal), கட்லா (Katla) மற்றும் இறால் ஆகியவை முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த வகையில் இந்தக் கட்டுரையில் சுவைக்கு அப்பால், பல்வேறு வகையான மீன்கள் வழங்கும் ஆரோக்கிய நன்மைகளைப் புரிந்துகொள்வது குறித்து பார்ப்போம்.
அந்த வகையில் இந்த மீன்களில் சில வகைகள் வயதானதை மெதுவாக்கவும், சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
ஆகவே, ஆரோக்கியமான மீன் உணவுகளை பற்றி அறிந்திருப்பது மிகவும் அவசியமானது. இதில் டுனா (tuna) என்ற மீனை உணவில் எடுத்துக் கொண்டால் மன அழுத்தம் குறையும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்த வகை மீன்கள் முடி உதிர்தலைத் தடுக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, பார்வைக் குறைபாடு மற்றும் மன அழுத்தம் உள்ளவர்கள் இந்த மீனை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு பயனடையலாம் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
DISCLAIMER: வாசகர்கள் கவனத்துக்கு: இந்தச் செய்தி தகவல் நோக்கத்தில் அளிக்கப்பட்டுள்ளது. மாறாக இது மருத்துவ ஆலோசனை அல்ல. இது குறித்து, ஏதேனும் கேள்விகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
இதையும் படிங்க : பாத்ரூமில் மொபைல் போன் யூஸ் பண்ணுவீர்களா? மூலநோய் பாதிக்கும் அபாயம்.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com