23 நகரங்களில் கூடுதலாக வோடபோன் 5ஜி சேவை; செக் பண்ணுங்க!

Vodafone Idea 5G: பிரபல தனியார் நெட்வொர்க் நிறுவனமான வோடபோன் கூடுதலாக 23 நகரங்களில் 5ஜி சேவையை வழங்குகிறது.

Published on: July 2, 2025 at 11:06 am

புதுடெல்லி, ஜூலை 2 2025: இந்தியாவில் வோடபோன் ஐடியா (Vi) நிறுவனத்தின் 5G அறிமுகம் தாமதமாகி வருவது நாமறிந்ததே. இதில் முதல்கட்டமாக, டெல்லி, பெங்களூரு, பாட்னா மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் வோடபோன் ஐடியா 5G சேவைகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், இந்த வாரம் 5G நெட்வொர்க் மேலும் 23 நகரங்களுக்கு வரும் என்று வோடபோன் ஐடியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

23 புதிய நகரங்களில் வோடபோன் ஐடியா 5ஜி சேவை

  • அகமதாபாத்
  • ஆக்ரா
  • அவுரங்காபாத்
  • கோழிக்கோடு
  • கொச்சின்
  • டேராடூன்
  • இந்தூர்
  • ஜெய்ப்பூர்
  • கொல்கத்தா
  • லக்னோ
  • மதுரை
  • மலப்புரம்
  • மீரட்
  • நாக்பூர்
  • நாசிக்
  • புனே
  • ராஜ்கோட்
  • சோனேபட்
  • சூரத்
  • சிலிகுரி
  • திருவனந்தபுரம்
  • வதோதரா
  • விசாகப்பட்டினம்

வோடபோன் ரீசார்ஜ்

வோடபோன் ஐடியா 5G ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ.299 இல் தொடங்கி, 28 நாள் செல்லுபடியாகும் காலத்திற்கு கிடைக்கின்றன. அதாவது, ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. மேலும், வோடபோன் நிறுவனம் ரூ.349 மற்றும் ரூ.365 திட்டங்களையும் வழங்குகிறது. இதில் முறையே 1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டாவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஓபன் ஏ.ஐ, ஜெமினிக்கு எதிராக போட்டி.. வாட்ஸ்அப்பில் ஏ.ஐ சாட்பாட்கள்.. எப்படி உபயோகிப்பது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com