முதல் பரிசு ரூ.1 கோடி.. தனலட்சுமி கருணை யாருக்கு?

Kerala Lottery Results Today: கேரள லாட்டரியில் இன்று தனலட்சுமி டி.எல் 8 குலுக்கல் நடைபெறுகிறது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

Published on: July 2, 2025 at 10:42 am

Updated on: July 2, 2025 at 10:46 am

திருவனந்தபுரம், ஜூலை 2 2025: கேரள லாட்டரியில் இன்று (புதன்கிழமை) தனலட்சுமி டி.எல் 8 குலுக்கல் பரிசுகள் மாலை 3 மணிக்கு மேல் அறிவிக்கப்பட உள்ளன. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். இந்தப் பரிசுக்கான குலுக்கல் திருவனந்தபுரம் பேக்கரி ஜங்ஷன் அருகில் உள்ள கோர்கி பவனில் நடைபெறும்.

பரிசு விவரம்

  • முதல் பரிசு: ரூ. 1 கோடி
  • 2வது பரிசு: ரூ. 30 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 5 லட்சம்
  • 4வது பரிசு: ரூ. 5,000
  • 5வது பரிசு: ரூ. 2,000
  • 6வது பரிசு: ரூ. 1,000
  • 7வது பரிசு: ரூ. 500
  • 8வது பரிசு: ரூ. 200
  • 9வது பரிசு: ரூ. 100
  • ஆறுதல் பரிசு: ரூ. 5,000

லாட்டரி முடிவுகளை பார்ப்பது எப்படி?

கேரள லாட்டரியின் முடிவுகளைப் பார்க்க www.keralalottery.info என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும். மேலும், கேரள அரசு அரசிதழ் அலுவலகத்திலும் நீங்கள் வெற்றி எண்களை நேரில் சரிபார்க்கலாம்.

பரிசுத் தொகை எப்படி கிடைக்கும்?

லாட்டரி பங்கேற்பாளர்கள் தங்களிடம் உள்ள லாட்டரி டிக்கெட் எண்களை கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட வெற்றி எண்களுடன் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில், அவர்களின் எண் பொருந்தினால், அவர்கள் அந்தந்த பரிசுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பரிசு பெற என்னென் ஆவணங்கள் தேவை

  • வெற்றி பெற்ற டிக்கெட்டின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்.
  • கெஜட்ட அதிகாரியால் கையொப்பமிடப்பட்டு சான்றளிக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
  • பான் கார்டின் கையொப்பமிடப்பட்ட நகல்.
  • பரிசு கோரிக்கை விண்ணப்பப் படிவம்
  • ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் ஐடி அல்லது ரேஷன் கார்டு போன்ற அடையாள சான்று

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

இதையும் படிங்க :ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை திருத்திய ஹெச்.டி.எஃப்.சி வங்கி; புதிய வீதம் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com