Himachal Pradesh: இமாச்சலப் பிரதேசத்தில் 24 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் எப்படி வெளியே வந்தது தெரியுமா? நடந்தது என்ன?
Himachal Pradesh: இமாச்சலப் பிரதேசத்தில் 24 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் எப்படி வெளியே வந்தது தெரியுமா? நடந்தது என்ன?
Published on: June 24, 2025 at 12:27 pm
சிம்லா, ஜூன் 24 2025: இமாச்சலப் பிரதேசத்தில் அரசு பள்ளி மாணவிகள் 24 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி கணிதவியல் ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22 2025) கைது செய்யப்பட்டார்.
அதாவது, இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் 24 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி முதல்வரிடம் எழுத்துப்பூர்வ புகார் அளித்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
பள்ளியில் நடைபெற்ற ‘சிக்ஷா சம்வாத்’ நிகழ்ச்சியில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது, அங்கு பல மாணவர்கள் தாங்கள் சந்தித்த துன்புறுத்தல்கள் குறித்துப் பேசினர். அவர்களின் புகாரைத் தொடர்ந்து, இந்த விஷயம் பள்ளியின் பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்புக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. பின்னர் பள்ளி அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வழக்குப்பதிவு
பயிற்சி பெற்ற பட்டதாரி கல்வியாளரான அந்த ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 75 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் சஸ்பெண்ட்
இதற்கிடையில், ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்த விவகாரம் மிகத் தீவிரமானது. மேலும் சென்சிடிவ் ஆன பிரச்னை.
பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி துணை இயக்குநர் முதல்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பள்ளியை நேரில் பார்வையிட்டு, மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து, ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது” எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி.. கொடுமைக்கார இளைஞர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com