Maharashtra: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 15 வயதான சிறுமி ஒருவர் 2 மாதமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரை விபச்சாரத் தொழிலும் தள்ளியுள்ளனர்.
Maharashtra: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 15 வயதான சிறுமி ஒருவர் 2 மாதமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரை விபச்சாரத் தொழிலும் தள்ளியுள்ளனர்.
Published on: May 26, 2025 at 4:12 pm
தானே மே 26 2025: மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 வயதான சிறுமி ஒருவர் 2 மாதமாக அறையில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கருவுற்ற நிலையில், கருவை கலைத்து அவரை விபச்சாரத் தொழிலில் தள்ளியுள்ளனர்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (மே 25 2025) வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், “இந்த வழக்கில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இருப்பினும் முக்கிய குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார்” என்றார். மேலும், சில தொழிலாளர்கள் இதைப் பற்றி அறிந்த பிறகு சிறுமியின் துயரம் வெளிச்சத்திற்கு வந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “திலக் நகர் போலீசார் டோம்பிவலியின் கிராமப்புறப் பகுதியில் உள்ள ஒரு வீட்டைச் சோதனை செய்து சிறுமியை மீட்டனர்” என்றும் போலீசார் மேற்கொண்டு தெரிவித்தனர். இது குறித்து செய்தி நிறுவனமான பி.டி.ஐ, “பாதிக்கப்பட்ட சிறுமி தனது பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்குப் பிறகு தனது தாயுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் அவரை அவரது ஆண் நண்பர் பாலியல் வன்புணர்வு செய்து விபசாரத் தொழிலில் தள்ள முயற்சித்துள்ளனர் எனக் கூறப்பட்டிருந்தது. தற்போது மாணவி 2 மாத கர்ப்பமாக உள்ளார். அவரின் கர்ப்பத்தை கலைக்கும் முயற்சிகளும் நடந்துள்ளன. இந்த நிலையில் போலீசாருக்கு விஷயம் தெரிய சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
வழக்குப்பதிவு
பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 137(2) (கடத்தல்), 65(1) (சில வழக்குகளில் பாலியல் வன்கொடுமை), 88 (கருச்சிதைவை ஏற்படுத்துதல்), 143 (ஆள் கடத்தல்), 144 (கடத்தப்பட்ட நபரை சுரண்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஐஸ்வர்யா ராய் முன்னாள் கணவர், லாலு மகன்; யார் இந்த தேஜ் பிரதாப் யாதவ்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com