Karnataka yoga teacher case | அமெரிக்க பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடக யோகா ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

October 15, 2025
Karnataka yoga teacher case | அமெரிக்க பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடக யோகா ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
Published on: September 3, 2024 at 6:25 pm
Updated on: September 3, 2024 at 7:32 pm
Karnataka yoga teacher case | இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடகாவை சேர்ந்த யோகா ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பெண் ஒருவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்துவருகிறார். இவர் கர்நாடக மாநிலம் சிக்மகளூருவில் யோகா சென்டர் நடத்திவரும் பிரதீப் உல்லால் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், “எங்களது குடும்பம் பஞ்சாப்பை பூர்விகமாக கொண்டது. நாங்கள் 2000வது ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்துவருகிறோம். நான் 2022ஆம் ஆண்டு சிக்மகளூருவில் உள்ள பிரதீப் உல்லால் யோகா சென்டருக்கு வந்திருந்தேன்.
அப்போது, பிரதீப் உல்லால், முற்பிறவி, காதல் உறவு எனப் பேசி என் மனதை மாற்றி என்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். அந்தக் கர்ப்பத்தையும் கலைக்க செய்தார்.
இதனால் நான் உடல் மற்றும் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “பிரதீப் உல்லால் மீது கடும் நடவடிககை எடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பிரதீப் உல்லாலை கர்நாடக மாநிலம் சிக்மகளூரு போலீசார் கைது செய்தனர். இது குறித்து அவரிடம் விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க: சத்தீஸ்கர் அடர் காட்டுக்குள் துப்பாக்கிச் சண்டை: 9 நக்ஸலைட்டுகள் என்கவுன்ட்டர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com