பாகிஸ்தான் பயங்கரவாதிகளை நொறுக்கிய இந்திய ராணுவம்.. சிந்தூர் யாத்திரை சென்ற பெண்கள்!

Sindoor Yatra in odisha: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ஆயுதப் படையின் வெற்றியை கொண்டாடும் வகையில், நூற்றுக்கணக்கான பெண்கள் சிந்தூர் யாத்திரை மேற்கொண்டனர்.

Published on: May 16, 2025 at 10:01 pm

புவனேஸ்வர், மே 16 2025: இந்திய ஆயுதப் படைகளால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் வெள்ளிக்கிழமை (மே 16 2025) மாலை நூற்றுக்கணக்கான பெண்கள் ‘சிந்தூர் யாத்திரை’ நடத்தினர்.

ஒடிசா மாநிலத்தின் மாஸ்டர் கேன்டீன் சதுக்கத்தில் கொடியசைத்து இந்த யாத்திரையை மாநிலத்தின் முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, யாத்திரையில் அவரும் பங்கெடுத்தார். இந்த யாத்திரையில், மாணவர்கள், என்.சி.சி கேடட்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தப் பங்கேற்பாளர்கள் தேசியக் கொடிகள் மற்றும் ஆபரேஷன் சிந்தூரை பாராட்டும் பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். இந்த யாத்திரையானது ஆர்டி மகளிர் பல்கலைக்கழகம் வரை நிகழ்ந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் அணிவகுத்துச் சென்றனர்.

ஆபரேஷன் சிந்தூர்

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த யுத்தத்தில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலானது, 9 இடங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆபரேஷன் சிந்தூர் பெயரிட்டவர் யார் தெரியுமா? ராஜ்நாத் சிங் சொன்ன தகவல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com