நாட்டைக் காக்கும் போரில் முரளி நாயக் வீர மரணம்: அன்புமணி ராமதாஸ் மரியாதை!

Anbumani Ramadoss pays tribute to Murali Naik: நாட்டைக் காக்கும் போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம் தெரிவித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Published on: May 9, 2025 at 6:14 pm

சென்னை, மே 9 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவ வீரர் முரளி நாயக், பாகிஸ்தான் நடத்திய தொடர் பீரங்கித் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

வீர வணக்கம்

நம்மைக் காப்பதற்காக இன்னுயிரை ஈந்த அந்த பெருமகனுக்கு எனது வீரவணக்கங்களை செலுத்துகிறேன். பயங்கரவாதிகளின் புகலிடமாகத் திகழும் பாகிஸ்தான் இந்தியா மீது அப்பட்டமாக பயங்கரவாதத் தாக்குதல்களை ஏவி விட்டு வருகிறது.

அவற்றிலிருந்து நாட்டையும், நம்மையும் காக்கும் புனிதப் பணியில், தங்களின் உயிரைப் பணயம் வைத்து நமது படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மிகவும் நெருக்கடியான இந்தக் காலக்கட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

டி.டி.வி தினகரன் இரங்கல்

இதேபோல் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தொடர் தாக்குதலில், அங்கு மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர் திரு.முரளி நாயக் அவர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

முரளி நாயக் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக ராணுவத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக நிற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலின் பேரணி; MH ஜவாஹிருல்லா வரவேற்பு

திருச்சியில் திமுக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு!
DMK public meeting

திருச்சியில் திமுக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு!

அண்ணா பல்கலை., ஆரம்பாக்கம், கோவை நிகழ்வுகள் இல்லாத தமிழகம் உருவாகும் நாள் தான் உண்மையான மகளிர் நாள்.. மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!
International women's Day2026

அண்ணா பல்கலை., ஆரம்பாக்கம், கோவை நிகழ்வுகள் இல்லாத தமிழகம் உருவாகும் நாள் தான்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com