முதல் காதல் குறித்து மனம் திறந்த நடிகை வேதிகா.. யாரிடம் மயக்கம் கொண்டார்?

Actress Vedika: நடிகை வேதிகா தனது முதல் காதல் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் யாரிடம் காதல் மயக்கம் கொண்டார் தெரியுமா?

Published on: May 4, 2025 at 2:13 pm

Updated on: May 4, 2025 at 2:29 pm

சென்னை மே 4 2025: தமிழ் சினிமா நடிகைகளின் பளபளக்கும் தேகத்திற்கு சொந்தக்காரி நடிகை வேதிகா. இவரை ரசிகர்கள் வெண்ணெய் கட்டி தேகம் கொண்ட வேதிகா என அழைப்பார்கள். தமிழில் நடிகை வேதிகா முனி, சக்கரகட்டி, பரதேசி, தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிம்புவுடன் இவர் நடித்த காளை என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் வெளியான குட்டி பிசாசு குட்டி பிசாசு என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.


இந்த நிலையில் தமக்கு இரு காதலர்கள் இருப்பதாக கூறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் நடிகை வேதிகா. சமூக வலைதளங்களில் பிசியாக காணப்படும் இவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமது இரு காதல்கள் குறித்து பேசிய நடிகை வேதிகா, ” என் அன்னையிடம் தோன்றியது தான் முதல் காதல்; அது முத்தான காதல். இரண்டாவது காதல் எனது நடனம்; இன்பமோ துன்பமோ நான் நடனத்தில் ஈடுபடுவேன். எனக்கு நடனம் என்றால் உயிர். ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் நான் நடனத்தில் ஈடுபடுவேன்” என குறிப்பிட்டு ரசிகர்களின் நெஞ்சில் பால்வார்த்துள்ளார்.

இதற்கிடையில் ஆண்கள் மீது உங்களுக்கு காதல் வராதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. இதற்கு, “பார்க்கலாம்” என நடிகை வேதிகா பதில் அளித்துள்ளாராம்.

இதையும் படிக்க: சட்ட சிக்கலை எதிர்கொள்ளும் விஜய் தேவராகொண்டா.. ஹைதராபாத்தில் வழக்குப்பதிவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com