Sania Mirza: ‘கர்ப்பத்தை விட தாய்ப்பால் கொடுப்பது கடினமாக இருந்தது’ என பிரபல டென்னிஷ் வீராங்கனை சானியா மிர்ஸா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Sania Mirza: ‘கர்ப்பத்தை விட தாய்ப்பால் கொடுப்பது கடினமாக இருந்தது’ என பிரபல டென்னிஷ் வீராங்கனை சானியா மிர்ஸா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Published on: April 26, 2025 at 10:52 pm
ஹைதராபாத், ஏப்.26 2025: டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா சமீபத்தில் மசூம் மினாவாலாவுடனான உரையாடலின் போது மனம் திறந்து பேசினார். அப்போது, “தாய்ப்பால் கொடுப்பதில் தனக்கு ஏற்பட்ட சவால்கள்; தொழில்முறை டென்னிஸிலிருந்து விலகல்” என பல்வேறு விஷயங்களை நினைவு கூர்ந்தார்.
இது குறித்து பேசிய அவர், “முடிந்தவரை என் மகனுடன் அதிக நேரம் செலவிடுவதுதான் எனக்கு பிடித்தது. குழந்தைகளுக்கு அந்த நிலைத்தன்மை உணர்வும், பெற்றோரின் ஆதரவும் தேவைப்படும் வயதில் அவன் இருக்கிறான். அந்த தருணங்களை நான் தவறவிட விரும்பவில்லை” என்றார்.
இந்த நிலையில் சானியா மிர்ஸா விமானப் பயணம் ஒன்று குறித்து பேசுகையில், “ஒரு நிகழ்விற்காக டெல்லிக்கு பறந்தபோது அவருக்கு ஆறு வார வயதுதான் இருந்தது. அந்த தருணத்தை இப்போது அவர் ஒரு திருப்புமுனையாகக் கருதுகிறார். “நான் பறந்ததில் மிகவும் கடினமான விமானப் பயணம் அது. நான் அழுதேன், நான் செல்ல விரும்பவில்லை” என்றார்.
மேலும், விமானத்தின் நடுவில் தாய்ப்பாலை பம்ப் செய்து அதே நாளில் ஹைதராபாத் திரும்பியதையும் சானியா மிர்ஸா நினைவு கூர்ந்தார். அவர் நலமாக இருந்தார். நான் நலமாக இருந்தேன். நான் இங்கும் அங்குமாக கண்ணீர் சிந்தினேன்” என்றார்.
3 மாதம் தாய்ப்பால் கொடுத்தேன்- சானியா மிர்ஸா
தொடர்ந்து சானியா மிர்ஸா, “நான் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தாய்ப்பால் கொடுத்தேன். அது எனக்கு மிகவும் கடினமான பகுதியாகும்” என்றார். மேலும், கர்ப்பத்தை விட இது கடினமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து பேசிய சானியா மிர்ஸா, “மன ரீதியான இது எனக்கு பாதிப்பு. நான், ‘நான் இன்னும் மூன்று முறை கர்ப்பமாகிவிடுவேன். ஆனால், தாய்ப்பால் கொடுப்பது மிகவும் கடினமானது” என்றார்.
இதையும் படிங்க : கௌதம் கம்பீருக்கு பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்: டெல்லி காவல் நிலையத்தில் புகார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com