Tourist Family: நடிகை சிம்ரன் இயக்குனரும் நடிகருமான சசிகுமாருக்கு புதிய படம் ஒன்றில் ஜோடியாக நடிக்கிறார். இதுகுறித்து நடிகை சிம்ரன் பேசியுள்ளார்.
Tourist Family: நடிகை சிம்ரன் இயக்குனரும் நடிகருமான சசிகுமாருக்கு புதிய படம் ஒன்றில் ஜோடியாக நடிக்கிறார். இதுகுறித்து நடிகை சிம்ரன் பேசியுள்ளார்.
Published on: April 26, 2025 at 2:36 pm
Updated on: April 26, 2025 at 6:47 pm
சென்னை ஏப்ரல் 26 2025: தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சிம்ரன், கிட்டத்தட்ட ஒன்றரை தசாப்த காலம் கனவு கன்னியாக வலம் வந்தார்.
இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. இந்த நிலையில் நடிகை சிம்ரன், ” அண்மையில் வெளியான நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூலித்து தற்போது வரை வெற்றி நடை போடுகிறது. இந்த நிலையில் நடிகை சிம்ரன் தற்போது சசிகுமாருக்கு ஜோடியாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்து பேசிய நடிகை சிம்ரன், ” சினிமாவை பொறுத்தவரை ஜூனியர் சீனியர் என்ற வேறுபாடு கிடையாது. இங்கு திறமைக்கு மரியாதை உண்டு. சசிகுமாரை பொறுத்தவரை அவர் திறமையான இயக்குனர் மற்றும் நடிகர்.
அந்த வகையில் சசிக்குமாருடன் இணைந்து நடித்தது எனது அதிர்ஷ்டம். இனிவரும் காலங்களில் அடுத்தடுத்து குடும்பப் பாங்கான திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். அதே நேரம் ஆக்ஷன் திரைப்படங்களிலும் நடிப்பேன்” என்றார்.
இதயம் படிங்க; கடவுள் கூட.. சாய்ரா பானு குறித்து மனம் திறந்த ஏ.ஆர். ரஹ்மான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com