சூர்யா vs தனுஷ்; தமிழ் சினிமாவில் முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்தவர் யார்?

Surya Vs Dhanush: நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமாரின் பேச்சால் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யார்?

Published on: April 26, 2025 at 12:31 pm

Updated on: April 26, 2025 at 12:22 pm

சென்னை ஏப்ரல் 26 2025: நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் சமீப காலமாக மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள புதிய படம் ரெட்ரோ.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா இரு விதமான தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் முன்னோட்ட விழாவில் பேசிய நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார், ” சூர்யாவுக்கு முன்பு தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் தோன்றிய நடிகர் யார் இருக்கிறார்? என சவால் விடுக்கும் வகையில் பேசினார்.

இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் சலசலப்பை தூண்டியது. குறிப்பாக நடிகர் சூர்யாவுக்கு முன்பே தனுஷ் சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் தோன்றி நடித்தார் என அவரது ரசிகர்கள் புகைப்படங்களை பதிவேற்றி வந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் விஷால் சமீபத்தில் பேட்டி ஒன்றில், ” நடிகர் தனுஷ் 2007 ஆம் ஆண்டு வெளியான பொல்லாதவன் திரைப்படத்தில் சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் நடித்திருந்தார்.

அதன் பின்னர் நான் சத்தியம் திரைப்படத்தில் சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் நடித்தேன். மத கஜ ராஜா திரைப்படத்திலும் இதே உடல்கட்டுடன் தான் நான் நடித்திருந்தேன். ஆனால் இதையெல்லாம் அவர்கள் மறந்திருப்பார்கள் போலும்” என்றார்.

நடிகர் சூர்யா கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் தோன்றியிருப்பார். இந்தப் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன.
இந்தப் படம் 2008 ஆம் ஆண்டு வெளியானது. அதே நேரம், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் பொல்லாதவன் திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நமீதாவின் தீவிர ரசிகன்.. நான் ரசித்த காட்சி.. மனம் திறந்த பாக்கியராஜ்..!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com