அக்ஷர்தாம் டூர், பிரதமர் மோடியுடன் டின்னர்: ஜே.டி. வான்ஸ் இந்தியா விசிட்.. முழு விவரம்!

JD Vance India visit: அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், அக்ஷர்தாம் கோவில் செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் திங்கள்கிழமை (ஏப்.21 2025) சந்தித்துப் பேசுகிறார்.

Published on: April 20, 2025 at 1:28 pm

புதுடெல்லி, ஏப்.20 2025: அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது மனைவி உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகளுடன் ஏப்ரல் 21 முதல் இந்தியாவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதற்கிடையில், டெல்லியில் அரசியல் கூட்டங்களில் ஈடுபடுவதற்கு முன்பு குடும்பத்தினர் இந்தியாவின் கலாச்சார அடையாளங்களை பார்வையிடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வர்த்தகம், வரிவிதிப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த இருதரப்பு ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கான வழிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அமெரிக்க துணை தலைவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதையடுத்து, திங்கள்கிழமை (ஏப்.21 2025) மாலை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாம் பெண்மணி உஷாவுக்கும் இரவு விருந்து அளிக்கிறார்.

நான்கு நாள் இந்தியப் பயணமாக அமெரிக்க துணை அதிபர் இந்தியா வரவுள்ளார். இவர்கள், திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பாலம் விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உட்பட சுமார் 60 நாடுகளுக்கு எதிராக கடுமையான வரிவிதிப்பு முறையை விதித்துள்ளார்.

இந்த வரி விதிப்பு இடைநிறுத்திய சில வாரங்களுக்குப் பிறகு, வான்ஸின் முதல் இந்திய வருகை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விழிஞ்சம் துறைமுகத்தை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி.. தேதி என்ன தெரியுமா?

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா!
Justice Nagarathna

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com