கைகோர்க்கும் ராஜ்- உத்தவ் தாக்கரே; பட்னாவிஸ் பதில் என்ன? பரபரக்கும் மகாராஷ்டிரா!

Raj and Uddhav Thackeray reunion buzz : சிவசேனா உத்தவ் தாக்கரே மறறும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர்கள் ஒன்றிணைவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

Published on: April 20, 2025 at 11:53 am

மும்பை, ஏப்.20 2025: மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பிரிந்த உறவினர்களான உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே இடையே மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பெரிதும் ஊகிக்கப்பட்டதை வரவேற்றார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சனிக்கிழமை (ஏப்.19 2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அவர்கள் ஒன்றாக வந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இது நடந்தால் யாரும் வருத்தப்பட எந்த காரணமும் இல்லை” என்றார்.

தொடர்ந்து, “ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். மற்றொருவர் அதற்கு பதிலளித்துள்ளார். நாம் ஏன் அதில் தலையிட வேண்டும்? என்றார்.

கைகோர்க்கும் உத்தவ்- ராஜ் தாக்கரே

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்) தலைவர் ராஜ் தாக்கரேவும், சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவும் சனிக்கிழமை (ஏப்.19 2025) தனித்தனியாக மாநில மற்றும் மராத்தி மக்களின் நலனுக்காக ஒன்றுபடத் தயாராக இருப்பதாகக் கூறினார்கள். இதைத் தொடர்ந்து, உறவினர்கள் மீண்டும் இணைவதற்கான ஊகங்கள் சூடுபிடித்தன. இது தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்தன.

ராஜ் தாக்கரே கோரிக்கை

முன்னதாக இது குறித்து பேசிய ராஜ் தாக்கரே, “எனக்கு மகாராஷ்டிராவின் நலன் பெரியது. மற்ற அனைத்தும் அதற்கு முன் இரண்டாம் பட்சம்தான். அதற்காக நான் சிறிய சர்ச்சைகளை ஒதுக்கி வைக்க முடியும் என நம்புகிறேன். உத்தவ்வுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். அவரும் அதற்குத் தயாரா? என்றார்.

உத்தவ் தாக்கரே பதில்

இதற்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, “மராத்தி மொழி மற்றும் மகாராஷ்டிராவுக்காக சிறு சச்சரவுகளை ஒதுக்கி வைக்க நானும் தயாராக இருக்கிறேன். நான் ஒன்றாக வேலை செய்ய தயாராக இருக்கிறேன், ஆனால் அவர் (ராஜ்) இனி மகாராஷ்டிரா எதிர்ப்பு மக்களையும் கட்சிகளையும் நடத்தக்கூடாது. சத்ரபதி சிவாஜி மகாராஜின் முன் சத்தியம் செய்ய வேண்டும்” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மராட்டியத்தில் இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்: உத்தவ் தாக்கரே!

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா!
Justice Nagarathna

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com