Durai Vaiko vs Mallai Sathya clash: ம.தி.மு.க. பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகிய நிலையில், அந்த ராஜினாமா இன்னமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.
Durai Vaiko vs Mallai Sathya clash: ம.தி.மு.க. பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகிய நிலையில், அந்த ராஜினாமா இன்னமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.
Published on: April 19, 2025 at 10:07 pm
Updated on: April 19, 2025 at 11:06 pm
சென்னை, ஏப்.19 2025: ம.தி.மு.க முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். இது அவரது கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், ம.தி.மு.க. பொதுக்குழு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.20 2025) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் துரை வைகோ பங்கேற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, துரை வைகோ தனது விளக்கத்தில், ” மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒருவர் செயல்படுகிறார். கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பழியை ஏற்படுத்தி சுகம் காணும் ஒருவரின் மத்தியில் பணியாற்ற நான் விரும்பவில்லை. என்னால் இந்த இயக்கத்துக்கோ தலைவருக்கோ எல் முனை கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்பதால் தான் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.
கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கட்சியினர் தொடர்ந்து செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஏப்ரல் இருபதாம் தேதி சென்னையில் நடைபெறும் மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் நான் பங்கேற்பேன் எனவும் துரை வைகோ கோரி இருந்தார்.
துரை வைகோ முடிவு குறித்து வைகோ
துரை வைகோவின் முடிவு குறித்து வைகோ அதிர்ச்சி தெரிவித்தார். இதுகுறித்து பேசிய வைகோ, ” கட்சியிலிருந்து துறை விலகியதை புதிய தலைமுறை செய்தி பார்த்து தான் நான் தெரிந்து கொண்டேன்; அவரின் முடிவு எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது” என்றார். இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு நடத்தினார்.
துரை வைகோவுக்கு அறிவுறுத்தல்
இதற்கிடையில் துரை வைகோவின் ராஜினாமா, ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் அவர் கட்சியில் தொடர்ந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மதிமுகவில் இந்த திடீர் மோதல் ஏற்பட்டுள்ளதற்கு துரை வைகோ, மல்லை சத்யாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவது தான் காரணம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பொன்முடி பேச்சு சர்ச்சை.. அமைச்சர்களுக்கு மு.க ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com