Actor Shine Tom Chacko: பிரபல கேரள நடிகர் சாக்கோவுக்கு போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இவர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகின.
Actor Shine Tom Chacko: பிரபல கேரள நடிகர் சாக்கோவுக்கு போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இவர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகின.
Published on: April 19, 2025 at 8:47 pm
Updated on: April 19, 2025 at 8:49 pm
திருவனந்தபுரம், ஏப்.19 2025: கேரளத்தின் முன்னணி நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் மீது போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கொச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கேரள போதைப் பொருள் தடுப்பு போலீசார் அண்மையில் சோதனை செய்தனர். அப்போது, அங்குள்ள ஓட்டல் அறையில் இருந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஓட்டம் பிடித்தார்.
இதற்கிடையில், பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியஸ், சக நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் நடிகர் தமக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்து இருந்தார். அதாவது, ‘சூத்ரவாக்கியம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் குடிபோதையில் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
கொச்சியில் போதைப்பொருள் சோதனையின் போது ஹோட்டல் அறையிலிருந்து தப்பிச் செல்லும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சிசிடிவியில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
— Dravidan Times (@DravidanTimes) April 18, 2025
#CCTVFootage #CCTVCamera #malayalamcinema #viralreelsシ pic.twitter.com/IFg6rfsoer
இது கேரள திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் நடிகர் சாக்கோவுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னதாக, கொச்சி நகர வடக்கு காவல்துறையினரால் நடிகர் சாக்கோ கைது செய்யப்பட்டார். அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தில் நடிகர் சாக்கோ நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வெளிநாட்டில் கார் பந்தயம்; விபத்தில் சிக்கிய அஜித் குமார் கார்.. சிறிய காயம் எனத் தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com