7 நாள்களில் ரூ.60 கோடி வசூல்: தடுமாறும் சன்னி தியோலின் ஜாட்!

Jaat box office collection day 7: நடிகர் சன்னி தியோலின் படமான ஜாட் பாக்ஸ்ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. 2025 ஏப்.10ஆம் தேதி வெளியான இந்தப் படம் கடந்த 7 நாள்களில் ரூ.60 கோடி வசூலித்துள்ளது.

Published on: April 17, 2025 at 10:53 am

ஹைதராபாத், ஏப்.17 2025: நடிகர் சன்னி தியோலின் ஜாட் திரைப்படம், 2025 ஏப்.10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம், அவரது கடைசி வெளியீடான காதர் 2 போன்ற மிகப்பெரிய பரபரப்பை உருவாக்க முடியவில்லை.

Sacnilk.com இன் சமீபத்திய தகவலின்படி, ஜாட் பாக்ஸ் ஆபிஸில் ₹55 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் தெரிகிறது. இந்த நிலையில், புதன்கிழமை (ஏப்.16 2025) படம் ₹ 3.31 கோடி வசூலித்தது. இனிவரும் நாள்களில் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கும் எனத் தெரிகிறது. இந்தப் படம் அதிகப்பட்சமாக ஏப்.13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரூ.14 கோடி வசூலை ஈட்டியது.

இந்த நிலையில், படத்தின் வசூல் ரூ.100 கோடியை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில் பாக்ஸ் ஆபீஸ் பிரஷர் குறித்து நடிகர் சன்னி தியோல் கூறுகையில், “பிரஷரா? நான் என் வாழ்நாளில் ஒருபோதும் பிரஷரை எடுத்துக் கொண்டதில்லை. ஆனால், இன்றைய காலத்தில் மக்கள் உங்களை அழுத்தத்தால் வீழ்த்துவார்கள். இதைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்” என்றார்.

இதையும் படிங்க : ரஷ்ய மாடல், ரூ.1800 கோடி சொத்து.. பவன் கல்யாணின் 3வது மனைவி யார் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com