இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 அப்ரண்டீஸ் பணி; எப்படி விண்ணப்பிப்பது?

IOB Apprentice Jobs | இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்ரண்டீஸ் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி செப்டம்பர் 10 ஆகும்.

Published on: August 30, 2024 at 5:39 pm

IOB Apprentice Jobs | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) அப்ரண்டீஸ் பணிகளுக்காக ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் iob.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 10, 2024 க்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் தேர்வு செப்டம்பர் 22, 2024 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 550 காலியிடங்கள் உள்ளன.

தகுதி

வயது வரம்பு

ஆகஸ்ட் 1, 2024 தேதியின்படி 20 வயது முதல் 28 வயது வரை இருத்தல் வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்வுகள் உள்ளன.

கல்வித் தகுதி

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.472ம், பெண்கள் மற்றும் பட்டியல் மற்றும் பழங்குடியை சேர்ந்தவர்களுக்கு ரூ.708ம் தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் பொது, ஓ.பி.சி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு (இ.டபிள்யூ.எஸ்) தேர்வு கட்டணமாக ரூ.944ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் விவரங்களை iob.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தில் தேர்வுக் கட்டணம் செலுத்தி பின்னர், பிரிவுண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதையும்ப படிங்க திருநெல்வேலி மாவட்ட சட்ட உதவி பணி: வழக்கறிஞர்களுக்கு அழைப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com